ஒருங்கிணைந்த நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம்

19.12.2023, அதே கோம் பின்னகம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மக்கள் சமூக வளர்ச்சி நிறுவனம் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம் என்ற கருப்பொருளுடன் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில்19.12.2023. அன்று காலை 11 மணியளவில் சமூகக் குழுக்களுடன் உறுதிமொழி ஏற்று பிரச்சாரத்தை மேட்டுப்பாளையம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு புனித ராஜ் அவர்கள் கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருமிகு சரஸ்வதி முன்னிலை வகித்தார். திரு சீனு தமிழ் மணி ,பூவுலகின் நண்பர்கள், திருமிகு சித்ரா பிரியதர்ஷினி கருத்துரை வழங்கினார்கள். திருமிகு பத்மாவதி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 16 நாள் தொடர் பிரச்சாரத்தின் நோக்கங்கள் பற்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 35க்கும் மேற்பட்ட பெண்கள் மூன்று குழந்தைகள் ஐந்து ஆண்கள் மற்றும் காவல்துறை கலந்து கொண்டனர் வீதிகளில் அனைவருக்கும் 16 நாள் தொடர் பிரச்சாரத்தின் நோட்டீஸ் வழங்கப்பட்டன

Leave a comment