“நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம்”

19.12.2023, மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு , அதேகொம் பின்னகம் ,சமுக நலன் உரிமைத்துறை மற்றும் வுமன் எம்பொவெர்மண்ட் டிரஸ்ட் இணைந்து “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம்” என்ற கருப்பொருளுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம் மற்றும் கலசப்பாக்கம் கிராமம் இரண்டு இடத்தில்ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. அதில் தென்பெள்ளிப்பட்டு அகதிகள் முகாம், கலசப்பாக்கம், பூண்டி காலூர், பாடகம் ,காம்பட்டு. சீட்டம்பட்டு. விண்ணுபட்டு, கீழ் வன்னியனூர், கன்னிகாபுரம், பத்தியவாடி, அலங்காரம், மங்கலம், பாடகம், கணேஷபுரம், அணியாலை, செங்கநல்லூர் ,லாடபுரம் போன்ற கிராமத்தில் அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவி குழு தலைவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலத்துறை அதிகாரி திருமிகு. மீனாம்பிகை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி திருமிகு. எலிசபெத் ராணி ஒருங்கிணைந்த சேவை மைய ஆலோசகர், திருமிகு சாந்தினி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், திருமிகு சரண்யா மற்றும் சமூக நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பிரச்சார நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர். முதலில் திருமிகு நேசகுமாரி அவர்கள் அவர்களை அறிமுகம் செய்து கொண்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மக்களை வரவேற்றார் பிறகு திருமிகு தமிழ்ச்செல்வி அவர்கள் நோக்க உரையாற்றினர். முதலில் அவர்களை அறிமுகம் செய்து கொண்டு பிறகு அதேகொம் பின்னகம் மற்றும் மைத்ரி பெண்கள் கூட்டமைப்பு செய்து வரும் பணிகளை விளக்கினர்.கடந்த நான்கு ஆண்டு கண்டறிந்த வழக்கின் விவரங்களையும் அதற்கான தீர்வு கண்ட வழிமுறைகளின் விளக்கினர் பாலின சமத்துவம் பற்றி கூறி குடும்பத்தில் ஆண் குழந்தை பெண் குழந்தையும் சமமாக வளர்க்க வேண்டும் ,சமமான கல்வி உணவு கொடுக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இரண்டு குழந்தைகளுக்கு சமமான உரிமை கொடுக்க வேண்டும் என்று பேசப்பட்டது. பெற்றோர்கள் குழந்தைகளிடம் பழகும் முறை பற்றியும் அவர்களை கண்காணிக்கும் முறை பற்றியும் கூறப்பட்டது தொலைபேசி மூலம் ஏற்படுகின்ற பாதிப்புகளைக் கூறி அதனை எப்படி மதிப்பு வராமல் கையாளுவதற்கான வழிமுறைகளை எடுத்து கூறப்பட்டது. பிறகு வன்முறையால் பாதிக்கப்பட்ட நபர்கள் முதலில் பிரச்சனைகளை வெளியில் சொல்ல வேண்டும் அப்பொழுதுதான் அதற்கான தீர்வு கிடைக்கும் மோடி மறைப்பதால் பாதிப்புகள் வேண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நமது பிரச்சினை மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானமாக ஏற்படும் என்று கருதாமல் பிரச்சனை வெளியில் சொன்னால் தான் அதற்கு தீர்வு கிடைக்கும் என்று என்று நினைத்து நீங்கள் பாதிப்புகளை முதலில் வெளியில் சொல்ல வேண்டும் உங்களது உறவினருக்கும் குடும்பத்தினருக்கும் எந்த ஒரு வன்முறை நிகழ்ந்தாலும் நீங்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை அணுக வேண்டும் இல்லை என்றால் எங்களை போன்ற தன்னார்வனுக்குதனை அணுகலாம் என்று கூறப்பட்டது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 10 9 8 என்ற எண்ணை அழைப்பது பற்றியும் கூறப்பட்டது பாதிக்கப்பட்ட பெண்களை மட்டும் குறை குறை சொல்கிறோம் பாதிப்பை ஏற்படுத்திய நபரை யாரும் குறை சொல்வதில்லை அப்படி செய்வது தவறு பாதிக்கப்பட்ட ஒரு ஒரு பெண்ணுக்கு பெண்கள் ஆகிய நீங்கள் உறுதுணையாக இருந்து அவர்கள் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நலம் மற்றும் மனநல பாதிப்புகளை எடுத்து கூறப்பட்டது நவம்பர் 25 முதல் டிசம்பர் பத்து வரை பிரச்சாரம் செய்வதின் நோக்கத்தை எடுத்துரைக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் திருமிகு மீனாம்பிகை மற்றும் எலிசபெத் ராணி சாந்தினி பேசுகையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான அரசுகள் விதித்த சட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினர். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் என்னென்ன உதவிகள் செய்து வருகிறது என்பதை பற்றி விளக்கினர். பெண்களுக்கு ஏற்படுகின்ற உடல் ரீதியான வன்முறை வார்த்தை ரீதியான வன்முறை மனரீதியான வன்முறை பொருளாதார ரீதியான வன்முறை என்ன பண்ற வன்முறைகளைப் பற்றி கூறிய அதன் மூலம் பெண்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் அதில் இருந்து மீண்டு வந்து தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்று கூறுங்கள். வழக்கறிஞர் திருமிகு கோமளவல்லி அவர்கள் பேசுகையில் உங்களுக்கான வன்முறை சட்டம் பற்றி கூறினர் 18 வயதிற்கு பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நெற்பய அரசு உதவித்தொகை பெறுவதற்கான புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர் பெண் குழந்தைகளை யாரையும் நம்பி விட்டுச் செல்ல வேண்டாம். பாதிப்பு ஏற்படுவதற்கு முதல் காரணம் தெரிந்த நபர் உறுப்பினர்களால் மட்டுமே பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதற்கு உதாரணமாக திருவண்ணாமலை கையாண்ட வழக்குகளைப் பற்றி எடுத்துரைத்தனர்.அனைவரும் அவர்களது கருத்துக்களை கூறி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்தனர் முடித்த பிறகு ஆட்டோ பிரச்சாரத்தை திருமிகு மீனாம்பிகை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரி அவர்கள் துவங்கி வைத்தார் நிகழ்ச்சிநிறுதியில் திருமிகு சவுந்தரி உமன் எம்ப்ரூவ்மெண்ட் டிரஸ்ட் களப்பணியாளர் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினர். இதில் 194 நபர்கள் பயன் அடைந்து உள்ளார்

Leave a comment