21.12.2023, திருவண்ணாமலை மாவட்டத்தில் கரையம்பாடி , கடலூர் கிராமத்தில் இன்று பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திருமிகு காயத்ரி பணித்தள பொறுப்பாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினர். திருமிகு தமிழ்ச்செல்வி அவர்கள் நோக்க உரையாற்றுகையில் அதேகொம் பின்னம் மைத்திரி திட்டம் பணிகளைக் குறித்து விளக்கினர் குறித்து பேசப்பட்டது. பாலின சமத்துவம் குறித்து குழந்தைகளை சமமாக வளர்ப்பது பற்றியும் அவர்களை கண்காணிக்கும் முறை பற்றியும் வாட்ஸ் அப்பை பாதுகாப்பாக கையாளும் முறை பற்றியும் கூறப்பட்டது.
பிறகு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள ஆலோசகர் திருமிகு கவிதா அவர்கள் பேசுகையில் சைல்டு லைன் என்னைப் பற்றியும் பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கும் முறை பற்றியும் பேசினார்கள். குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்கள் ஆலோசனை வழங்குவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தினர். பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு அரசு உதவி திட்டம் குறித்தும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் படிக்க முடியாத குழந்தைகளுக்கும் அவர்கள் உதவி செய்வதையும் விளக்கினர் .பாதுகாப்பான தொடுதல் பாதுகாப்பற்ற தொடுதல் பற்றி கூறினர். திரு மிக கோமளவள்ளி வழக்கறிஞர் அவர்கள் பேசுகையில் குடும்ப வன்முறை சட்டம் போஸ்கோ சட்டம் பற்றி விளக்கினர் பாலியல் வன்முறைகள் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அரசு நிர்பயா உதவித்தொகை பற்றி விளக்கினர் .பெற்றோர்கள் குழந்தைகளை யாரையும் நம்பி விட்டுச் செல்ல வேண்டாம் பாதிப்பு ஏற்படுவதற்கு மூல காரணம் உறவினர்களும் தெரிந்த நபர்களால் மட்டுமே. எனக்கு ஒரு பெண்கள் தன்னம்பிக்கையோடு வளர்க்க வேண்டும் அவர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கையுடன் ஊட்டி வளர்க்க வேண்டும் என்று கூறினர். குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் விருப்பப்படுகின்ற படிப்புகளை படிக்க வைத்து வாழ்வில் முன்னேற செய்ய வேண்டும் என்று கூறினர் குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் அமர்ந்து பேசி அனைத்து முடிவுகளும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு செய்து வரும் பணிகளைப் பற்றி விளக்கினர் திரு தனஞ்செழியன் வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் அவர்கள் பேசுகையில் வழக்குகள் பதிவு செய்த பிறகு அதற்கான நடவடிக்கைகள் எப்படி எடுக்க வேண்டும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் அதற்கு என்னென்ன வழிமுறைகளை நாம் கையாள வேண்டும் என்று பற்றி விளக்கினர். பஞ்சாயத்து தலைவர் திரு மிகு ஜெயக்கொடி குமார் அவர்கள் பேசுகையில் எங்கள் கிராமத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் உங்களுக்கு தகவல் சொல்கிறோம். அதற்கான உதவிகளை நீங்கள் செய்து தர வேண்டும் என்றும் கூறினர். இதுபோன்று விழிப்புணர்வு எங்கள் கிராமத்திற்கு இன்னும் தேவைப்படுகிறது நீங்கள் எப்பொழுது எங்களது உதவி தேவையனாலும் கூறினால் நாங்கள் நிகழ்ச்சிக்கான மக்களை தயார் செய்து கொடுக்கிறோம் என்று கூறினர் நிகழ்ச்சியின் இறுதியில் திருமிகு ஆஷா பறை அறக்கட்டளை அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினர் நிகழ்ச்சி நிறைவடைந்தது





















Leave a comment