25.12.2023 அன்று அதேகொம் பின்னகம் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு கூட்டுக்குரல் நாடக இயக்கம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கம் ஒருங்கிணைந்த குழந்தைகளுக்கான கிறிஸ்மஸ் புத்தாண்டு நிகழ்ச்சி பொறையூர் கிராமத்தில் நடைபெற்றது. திருமிகு லீலா அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நிர்வாக அறங்காவலர் ப. லலிதாம்பாள் அவர்களின் நினைவேந்தல் அண்ணல் அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கத்தில் தலைவி மற்றும் உறுப்பினர்கள் தலைமையில் அனுசரிக்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் திரு. தியாகு மாநில இளைஞரணி தலைவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அலுவலகத்தில் நோக்கங்கள் பற்றி கேட்டறிந்தார் குழந்தைகள் அனைவரும் நினைவஞ்சலி கலந்து கொண்டனர். திருமதி பர்மாவதி குழந்தைகளிடத்தில் பாதுகாப்பு உரிமைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது மேலும் குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாடல்கள் பாடினார் குழந்தைகளுக்கு வாழ்த்து கூறப்பட்டன 40 குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. அதேகொம் பின்னகம் அலுவலகத்தின் சார்பாக அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அண்ணல் அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்க தலைவி உறுப்பினர்கள் 16 நாள் பிரச்சாரத்தில் நிதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டன.






















Leave a comment