பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து பேரணி பிரச்சாரம்

2212.2023 அன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முடியனூர் கள்ளக்குறிச்சி மாவட்டம். மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதிகம் பின்னகம் – புதுச்சேரி மற்றும் அருவி அறக்கட்டளை இணைந்து நடத்திய “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து பேரணி பிரச்சாரம் நடைபெற்றது. இளங்கோவன் ஊராட்சி மன்ற தலைவர் முடியனுர் அவர்களின் தலைமையில். மீனாட்சி நிர்வாக அருவி அறக்கட்டளை அவர்களின் வரவேற்புரை உடன் நிகழ்ச்சி துவங்கியது. பொன்னியம்மாள் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். திருமிகு சகுந்தலா தேவி மருத்துவர் ஆரம்ப சுகாதார நிலையம் அவர்கள் கருத்துரை வழங்கினார். திரு பாரதி சுகாதார ஆய்வாளர் முடியனுர் அவர் மாணவர்களிடையே போதைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் வளர் இளம் பெண்கள் 18 வயதுக்கு உள்ள மாணவர்கள் கர்ப்பம் தரிப்பதும் குறித்தும் இதனால் ஏற்படுகின்ற பிரச்சனைகளைப் பற்றியும் அவர் மாணவர்களிடையே தெளிவாக விளக்கிக் கூறினார். தீபிகா மாவட்ட சமூக நல அலுவலர் கள்ளக்குறிச்சி அவர்கள் சமூக நல அலுவலகத்தில் என்னென்ன பணி செய்வது குறித்து மக்களிடையே இளைஞர்களிடையே மாணவர்களிடையே அவர் தகவலை தெரிவித்தார். திருமிகு பிறகு இளையராஜா மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கள்ளக்குறிச்சி அவர்கள் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர் இப்பேரணையில் மாணவர்களிடையே 16 நாள் தொழப் பிரச்சாரத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டதுபிரியதர்ஷினி பாலின வல்லுநர் ஒருங்கிணைந்த சேவை மையம் அவர் சேவை மையம் என்பது என்ன யாருக்காக பணி செய்கிறோம் எதற்காக பணி செய்கிறோம் என்ற தகவலை அவர் மக்களிடையே விளக்கிக் கூறினார். பிறகு இளையராஜா மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கள்ளக்குறிச்சி அவர்கள் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர் இப்பேரணையில் மாணவர்களிடையே 16 நாள் தொழப் பிரச்சாரத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. தாமு அண்ணாதுரை நிர்வாக இயக்குனர் பாரதி அறக்கட்டளை அவர் நன்றி உரையாற்றி இந்நிகழ்ச்சினை முடித்து வைத்தனர். இந்த பிரச்சாரத்தில் 120 மாணவர்கள் பெண்கள் 30 ஆண்கள் 30 கலந்து கொண்டனர்.

Leave a comment