வன்முறைக்கெதிரானபேரணி ஆட்டோ பிரச்சாரம்

26-12-2023 அன்று காரைக்காலில், அதேகொம் பின்னகம் புதுச்சேரி மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெஸ்ட் நிறுவனம், காரைக்கால் ஒருங்கிணைத்த “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை குறைப்பதற்கான பேரணி ஆட்டோ பிரச்சாரம். திருமிகு பத்மினி வெஸ்ட் நிறுவனம் நிர்வாகி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். நோக்க உரை திருமிகு சுதா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதேகொம் பின்னகம் களுடன் இணைந்து பணியாற்றி வரும் செயல்பாடுகளை விளக்கினார். திரு. ராஜேந்திரன் குழந்தைகள் பாதுகாப்பு மேம்பாட்டு அதிகாரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை காரைக்கால் அவர்கள் சிறப்புரை வழங்கினார். திருமிகு கரோலின் மேரி சமூக ஆர்வலர் அவர்கள் கருத்துரை – சமூகத்திற்காக செய்து வரும் பணிகளை விளங்கினார். அடுத்தபடியாக காரைக்கால் பேருந்து நிலையம் சென்று அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்பு பெரிய பேட் கிராமம் சென்று பொது மக்களை ஒருங்கிணைத்து பிரச்சாரம் நடத்தி அவர்களிடம் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. இறுதியாக திருமிகு மல்லிகா சமூக ஆர்வலர் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 150க்கும் மேற்பட்டோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பிரச்சார நோக்கத்தின் புரிதல் பெற்றனர்.

Leave a comment