23.12.2023 அன்று ரெட்டணை பேருந்து நிலையம் விழுப்புரத்தில்.
மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதேகொம் பின்னகம் புதுச்சேரி மற்றும் ரூரல் யூத் எஜுகேஷனல் டிரஸ்ட் இணைந்து நடத்திய “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” என்ற தலைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து ஒரு நாள் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்கள்- 150, ஆண்கள்- 30, வளரிளம் பெண்கள்- 30 என 120 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். குமுதா ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவர் ரெட்டணை அவர்களின் தலைமையில். திருமதி ரமணி அவர்கள் ரைட் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். குறிப்பாக போக்சோ சட்டம் பற்றியும் குழந்தை திருமணம் பற்றியும் பெண்கள் பணி செய்யும் இடத்தில் புகார் பெட்டகம் வைக்க வேண்டும் என்று மக்களுக்கு விளக்கினார். அவரை தொடர்ந்து திருமிகு குமுதா ரமேஷ் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் கருத்துரை வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார். திருமிகு பார்கவி அவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விழுப்புரம் அவர்கள் பெண் குழந்தை பாதுகாப்பும் கற்றியும் பெண் குழந்தைகள் வளர்ப்பது குறித்தும் அவ நிகழ்ச்சியில் உரையாற்றினார். பிறகு திருமிகு ரூபா தேவி ரைட் நிர்வாகி அவர்கள் இந்நிகழ்ச்சியின் கொடி அசைத்து பேரணியாக துவக்கி வைத்தார். பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அனைவரும் வன்முறை இல்லாத நாடாக மாற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். பிறகு B1 காவல் நிலையம் பெண் காவலர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பிரச்சாரத்திற்கு வந்திருந்த அனைத்து பெண்களும் பெண்களுக்கு எதிரான வன்முறை பாலியல் துன்புறுத்தல் நடந்தால் அனைத்து பெண்களும் ஒன்று இருந்து குற்றங்களை குறைக்க முன்வந்து போராடுவதற்கான புரிதலை நாங்கள் பிரச்சாரத்தில் பெற்றுள்ள என்று தகவலை எங்களிடம் கூறினார்கள்.

















Leave a comment