16 நாள் தொடர் பிரச்சாரம் – பெண் குழந்தைகளுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறையை குறித்து விழிப்புணர்வு முகாம்

23.12.2023 அன்று புலிப்பாக்கம் ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டம். மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதேகொம் பின்னகம் – புதுச்சேரி மற்றும் இனாட்டா பவுண்டேஷன் இணைந்து நிகழ்த்திய “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமதி நிர்மலா அசோகன் ஊராட்சி மன்ற தலைவர் புலிப்பாக்கம் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். திருமதி செண்பகவள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். திருமதி மலர்விழி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு காவல் அலுவலர் அவர்கள் கருத்துரை வழங்கினார். திரு.N. ராமச்சந்திரன் முன்னாள் தலைவர் குழந்தைகள் நலக்குழு(CWC) செங்கல்பட்டு அவர்கள் பேசுகையில் குழந்தை திருமணம் குறித்து ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். திருமதி.N. பரஞ்ஜோதி இனாட்டா பவுண்டேஷன் அவர்கள் பேசுகையில் குடும்ப வன்முறை பாலியல் வன்முறை(சீன்டல்) மற்றும்16நாள் பிரச்சாரம் குறித்தும்,பெண்களுக்கான சம உரிமை குறித்து மிகவும் தெளிவாக விளக்கினார். திருமதி.S. ஜெயந்தி இனாட்டா பவுண்டேஷன் அவர்கள் பேசுகையில் பெண் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் வன்கொடுமைகளை எப்படி குறைப்பது என்பதை பற்றி விளக்கினார். திரு.K. குமரேசன் வழக்கறிஞர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புலிப்பாக்கம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் இறுதியாக நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் சுமார் 230 பெண்கள் 30 ஆண்கள் 10 குழந்தைகள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்முறை பாலியல் துன்புறுத்தல் நடந்தால் அனைத்து பெண்களும் ஒன்றிணைந்து குற்றங்களை குறைக்க முன்வந்து போராடுவதற்கான புரிதலை பெற்றிருப்பார்கள்.

Leave a comment