1-1- 2024 அன்று அதேகொம் பின்னகம் – புதுச்சேரி, அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பயனாளிகள் & சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதேகொம் பின்னகம் சட்ட ஆலோசகர் திரு. சீனு பெருமாள் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். பின்பு அதேகொம் பின்னகம் பணியாளர்கள் மைத்திரி திட்டத்தில் பணியாற்றி வரும் விவரங்களை அனைவர் மத்தியிலும் பகிர்ந்து கொண்டனர். பின்பு வங்கி மேலாளர் திரு. தமிழ்மணிஅவர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் மற்றும் பணியினை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்பு மாவட்டங்களில் சட்டபூர்வமான உதவிகள் என்ன செய்து வருகின்றோம் என்பதனை வழக்கறிஞர் திரு. தமிழரசன் மற்றும் திரு. கமலதாஸ் பகிர்ந்து கொண்டனர். பின்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் புத்தாண்டு வாழ்த்து கூறி பணியினை சிறப்பாக மேற்கொள்வதற்கான வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நாட்குறிப்பு ஸ்வீட் காரம் வழங்கப்பட்டது.



























Leave a comment