வளர் இளம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை

அன்று 28/12/2023 குழந்தைகள் படைப்பாற்றல் சங்கம் கோண்டூர் அலுவலகத்தில். வளர் இளம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் திரு. சத்ரபதி, மருத்துவ அலுவலர்., திரு. பாலாஜி, ஹெல்த் இன்ஸ்பெக்டர்., திருமிகு. சிவசங்கரி, கிராம சுகாதார செவிலியர்., திரு யுவராஜா, சமூக செயல்பாட்டாளர்., திருமிகு. ஆனந்தவல்லி, கிராம சுகாதார செவிலியர்., ஆகியோர் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தொலைபேசியை பயன்படுத்தும் முறை, பிரச்சனை என்றால் அணுக வேண்டிய துறை, கல்வி, சமூகத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், நாம் எப்படி வளர வேண்டும், கிராமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற கருத்துக்களை முன்வைத்து பேசினார்.
இவை அனைத்தையும் மாணவிகள் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர். மாணவியர்களுக்கு நிறைய விஷயங்களில் புரிதல் ஏற்பட்டது. மாணவிகள் அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைத்தது என மாணவிகளே பின்னோட்ட கருத்தும் அளித்தனர். 30 மாணவிகள் பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர்.

Leave a comment