நாள்.05/01/24. இடம்..ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. தென்பசார். திண்டிவனம்..Tk
தலைமை… தலைமை ஆசிரியர்.
வரவேற்புரை,, SMC. தலைவர்.
கருத்துரை,,இலட்சுமிபதி.
ஒருங்கிணைப்பாளர்.அதேகொம் பெண்கள் கண்ணிய மையம்.திண்டிவனம்.
பங்கேற்பாலர்கள்.. 18
கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்.
அனைத்து குழந்தைகளையும் பெற்றோர்கள் தவறாமல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
நம் பஞ்சாயத்தில் குழந்தை திருமணம் இல்லாத பஞ்சாயத்தாக இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
போதைக்கு அடிமையாக குழந்தைகளின் தந்தைகளுக்கு போதைகளால் ஏற்படும் தீமைகள் பற்றியும்.போதை மறுவாழ்வு மையம் பற்றியும்.எடுத்துரைக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசப்பட்டது.
அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பாக மாதம் ஒரு முறை நடக்கும் பாலிக்கா பஞ்சாயத்து கூட்டத்திற்கு தவறாமல் குழந்தைகளை அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
குழந்தைகளிடம் மாலை நேரங்களில் பள்ளிக்கூடத்தில் நடந்த பாடப்பிரிவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பெற்றோர்கள் கலந்து பேச வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
உங்கள் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை எதுவாக இருந்தாலும் நம் அலுவலக மூலமாகவும் சமூக நலத்துறை மூலமாகவும் ஆலோசனை வழங்கமுடியும் என எடுத்துரைக்கப் பட்டது.
கூட்டத்தின் இறுதியில் SMC உறுப்பினர் கூட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது.



Leave a comment