இடம்: தளவானுர் நாள்: 11.01.2024
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் 11.01.2024 நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் 11பேர் பங்கேற்றார்கள். கடந்த கூட்டத்தில் நமது கிராமத்தில் பாதுகாப்பான இடம் , பாதுகாப்பாற்ற இடம் தேர்வு செய்து அதனை வரைபடம் மூலம் விலக்கப்பட்டது. இதில் பாதுகாப்பற்ற இடம் பற்றி மனுவாக எழுதி எதிர்வரும் ஜனவரி 26 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனுவாக வழங்குவது பற்றி பேசப்பட்டது. மனு எப்படி எழுத வேண்டும் என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. கோரிக்கை மனு எழுதுவது பற்றி எடுத்துக் கூறப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் பாலிகா பஞ்சாயத்து தலைவர் ,செயலர், துணைத் தலைவர் இவர்களுடன் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதே கம் பெண்கள் கண்ணிய மையம் கல ஒருங்கிணைப்பாளர் திரு சே. முருகன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியினை தன்னார்வலர் திருமிகு சிவகங்கை அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்



Leave a comment