இடம் .கொள்ளார் கிராமம் நாள் 11/01/24
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு.திரு.இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர். செல்வி விஜயலட்சுமி.உறுப்பினர். மற்றும் ஆசிரியர் இந்திரா.
கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்.19
கொள்ளார், கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்.
கடந்த மாதம் சிங்கனூரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கலந்து பேசப்பட்டது .நம் குழுசார்பாக குழந்தைகள் பயிற்சியில் போக்சோ வழக்கு சம்பந்தமாக நாடகம் ஏற்பாடு செய்த நம் குழுவிற்கு நன்றி தெறிவிக்கப்ப்டது.
ஞழந்தைகள் அனைவரும் பெற்றோர்களிடம் தினமும் பள்ளியில் நடந்த பாடங்கள் மற்றும் எது நடந்தாலும் பெற்றோர்களிடத்தில் கலந்து பேச வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
நம் மாவட்டத்தில் கொசு தொல்லையால் நோய்கள் அதிகமாக பரவி வருவதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது . நம் பள்ளியில் சுற்று சுவர் இல்லாத காரணத்தினால் வருகின்ற ஜனவரி 26 ந்தேதி நடக்க உள்ள கிராம சபா கூட்டத்தில் மணு கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப் பட்டது. குழந்தைகளும் பள்ளியில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் கலந்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
குழந்தைகளின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு மன நல ஆலோசனை நம் அலுவலக மூலமாக வழங்கப்படும். குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமாக ஞாபக திறன் வளர்க்க போட்டி நடத்தப்பட்டு அடுத்த மாத பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தில் பரிசு கொடுக்கலாம் என ஓப்புக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் விளைவுகள்::; அனைவரும் மாதம் ஒரு முறை நடக்கும் பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டனர். நன்றி!!! வணக்கம் 🙏🙏


Leave a comment