மகளிர் குழு உறுப்பினர்களுக்கான தொடர் கூட்டம்.

இடம். வில்மாதேவி கிராமம்  நாள். 10.1.24.

கூட்டத்தில் பங்கேற்று உறுப்பினர்கள்.17. 

பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்.

வருகின்ற மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செஞ்சி பெண்கள் கண்ணியம் மையம் ஏற்பாடு செய்கின்ற நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளில் பெண்களின் பங்குகள் குறித்தும் அதை எவ்வாறு ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும் என்றும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பெண்களுக்கான அரசினுடைய திட்டங்கள் மற்றும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.திருமதி ஜூலி அவர்கள் நன்றி கூறினார் . இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜான் போஸ்கோ பெண்கள் கண்ணிய மையம் செஞ்சி. செய்திருந்தார்.

Leave a comment