ஊர் :கொத்தம்பாக்கம் தேதி :18/1/2023
இடம் :ஓமந்தூரார் நிதி உதவி பெற்ற பள்ளி கொத்தம்பாக்கம்
உறுப்பினர்களின் எண்ணிக்கை :15
ஒருங்கிணைப்பாளர் :திருமிகு ஜெயபிரவா மற்றும் திரு ஏழுமலை
கூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :
அனைத்து மாணவிகளையும் ஒன்று சேர்த்து வட்டமாக அமர அமர வைத்தோம்
சிறிய கதை ஒன்று சொல்லப்பட்டது (முயலும் ஆமையையும் பற்றிய கதை) அந்த கதை இக்காலத்துக்கு ஏற்றது போல் மாணவிகளின் ஒற்றுமையைப் வலியுறுத்தும் விதமாக கூறப்பட்டது.பின்னர் முந்தைய கூட்டத்தைப் பற்றி நினைவூட்டினோம் அதில் என்னவெல்லாம் பேசப்பட்டது என்று மாணவிகளிடம் கேட்டு அறிந்தோம்
அவர்கள் பாதுகாப்பான இடம் பாதுகாப்பற்ற இடம் என்று கூறினார்கள்
தற்போது மனு எழுதுவது தொடர்பாக அவர்களிடம் பேசப்பட்டது
மனு எப்படி எழுத வேண்டும் என்பதைப் பற்றியும் புரிதலை ஏற்படுத்தினோம் மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள்
மனுவை எங்கு கொடுப்பது எப்படி கொடுப்பது என்று கேட்டார்கள். நாங்கள் வருகின்ற 26 அன்று உங்கள் ஊரில் கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது அக்கூட்டத்தில் 14 மாணவிகளும் ஒன்று சேர்ந்து பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் மனுவை கொடுக்க வேண்டும் என்று கூறினோம். சரி என்று கூறி மகிழ்ந்தனர்.






Leave a comment