தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு

நாள்… 24/01/24.                     இடம்..பெரமண்டூர்.


தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.
இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெரமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மயிலம் வட்டார கல்வித்துறை மற்றும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மரியச் செல்வி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பத்மாவதி,முருகன், விஜயகுமார், லோகநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் ஒருங்கிணைப்பாளர் திரு,லட்சுமிபதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.இதில் பெண் குழந்தை பாதுகாப்பு, குழந்தை திருமணம்,குழந்தை தொழிலாளர், போதைப் பொருள் விழிப்புணர்வு, சம்மந்தமாக இதில் பேசப்பட்டது, இந்த நாளில் பிறந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பிறகு பெண் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இதில் பங்குபெற்ற அனைவருக்கும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பாக உறுப்பினர் விஜயலட்சுமி அவர்கள் நன்றி கூறினார்.

Leave a comment