30 1 2024 அன்று கம்பத்தூர் கிராமத்தில், பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் .
நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது . அனைத்து மாணவர்களும் முயற்சி எடுத்து நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
அடுத்த மாதம் நடைபெறும் பாலிக்கப் பஞ்சாயத்து உறுப்பினர் கூட்டத்திற்கு முன்பதாக உறுப்பினர்களின் பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு சில பிரச்சனைகள் குறித்து கூறினர் அதற்கு தீர்வாக அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றும் பள்ளி முடிந்தவுடன் ஒன்றிணைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ADECOM Network பெண்கள் கண்ணியம் மைய ஒருங்கிணைப்பாளர் திரு. ஜான் போஸ்கோ அவர்கள் செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




Leave a comment