27/01/24 அன்று கொள்ளார் கிராமத்தில், வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம்.
திருமதி. இந்திரா ஆசிரியர் அவர்கள் தலைமையில், நிகழ்ச்சி அதேகொம் பெண்கள் கண்ணி மையம் கள உதவியாளர் திரு. லட்சுமிபதி அவர்கள் திண்டிவனம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.
கூட்டத்தின் துவக்கத்தில் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு என்ன என்று கருத்துக்கள் கேட்டு. பின் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டத்தின் அவசியம் மற்றும் பயன்பாடு குறித்து முதலில் வளர் இளம் பெண்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. பாலின சமத்துவம் குறித்தும் தற்போது அதனுடைய அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தனர். தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நடந்த சம்பவங்கள் ஒரு சிலவற்றை உதாரணத்துடன் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உணர செய்தனர். குழந்தை திருமணம் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குழந்தைகளின் உரிமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. பெண் கல்வி பற்றி எடுத்துரைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு POCSO வழக்குகள் பற்றி பேசப்பட்டது. மார்ச் மாதத்தில் நடக்க இருக்கும் இறுதி தேர்வு வருவதால அனைவரும் நன்றாக படிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது..கூட்டத்தின் இறுதியில் பின்னூட்டம் படிவம் மூன்று பெண் குழந்தைகளிடம் வாங்கப்பட்டது. கூட்டத்தில் 35 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.







Leave a comment