நாள்: 19.02.2023 பாலிகா பஞ்சாயத்து கூட்டம் இன்று (19.02.2024) தோகைப்பாடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சியை திருமிகு அர்ச்சனா அவர்கள் ஒருங்கிணைத்தார்கள், அதேகொம் பெண்கள் வள ஆதார மையம் கள ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் அவர்கள் கலந்து கலந்துகொண்டார்
உறுப்பினர்களிடையே பெண்கள் குழந்தைகள் சார்ந்து செயல்படும் அலுவலகம் பற்றி கேட்டறிந்தோம் அதற்கு உறுப்பினர்கள் தெரியாது என்று பதில் அளித்தார்கள். இதில் குழந்தைகளுக்கான அவசர எண் 1098 எண்களை உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். மேலும் இன்றைய கூட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்காக இயங்கும் அலுவலகம் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தின் உள்ளேயே இயங்கிவருகிறது. இவ்வமைப்பு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கிவருகிறது. இச்சேவை மையம் 24 மணிநேரம் செயல்படும் மையம் ஆகும் அவசரகால அழைப்பு எண் 181, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள், குழந்தை திருமணம் போன்ற தகவல்களை தெரிவிக்கலாம்.
அனைத்து மகளிர் காவல் நிலையம் (AWPS) விழுப்புரம், பாண்டிச்சேரி ரோடு மாதா கோவில் அருகே இயங்கிவருகிறது. இங்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்கலாம்
குழந்தைகள் நல குழு (CWC) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் உள்ளே செயல்படுகிறது. குழந்தைகள் நல குழு மூலம் பாதுகாப்பற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு, கல்வி, வளர்ச்சி, மருத்துவம் சார்ந்த உதவிகள் வழங்கப்படுகிறது.



Leave a comment