இடம். தளவானூர் கிராமம் . நாள் .21 .2.24.
கூட்டம் ஒருங்கிணைப்பு . திருமதி தவமலர் தன்னார்வலர் தளவானூர் கிராமம்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான அரசினுடைய திட்டங்கள் அதனுடைய செயல்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் அதனுடைய செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த சேவை மையம் 181 உதவி எண் மற்றும் அதனுடைய செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தபால் துறையில் செயல்படும் தங்கமகள் சேமிப்பு திட்டம் குறித்தும் அதனுடைய பயன்கள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது தங்களுடைய பெற்றோரிடம் இந்த திட்டத்தில் சேர ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆண்டு இறுதி தேர்வில் அனைத்து உறுப்பினர்களும் வெற்றி பெற வேண்டும் என்றும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு WDC சார்பாக பரிசுகள் வழங்கப்படும் என்றும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திரு ஜான்போஸ்கோ ஒருங்கிணைப்பாளர் Adecom பெண்கள் கன்னி மையம் செஞ்சி செய்திருந்தார் நன்றி.





Leave a comment