வளர் இளம் சிறுவர் & ஆண்களுக்கான கூட்டம்

வளர் இளம் சிறுவர் & ஆண்களுக்கான பயிற்சி கூட்டம் ,பாலின அடிப்படையில் வேலை பகிர்வு இன்று 22.02.2024 நடைபெற்றது இக்கூட்டத்தில் 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் தன்னார்வலர் திரு. R.கார்த்திகேயன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள் .அதேகொம் பெண்கள் வள ஆதார மையம் கள ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்கள்

உறுப்பினர்கள் இடையே பாலின அடிப்படையில் ஆண்,பெண் வேலை,கல்வி பகிர்வு பற்றி கேட்கப்பட்டது இதற்கு ஆண்கள் என்றால் நல்ல கல்வி கிடைக்கும் அறிவானவர்கள் சொல்வது சரியாக இருக்கும் என்று ஏற்றுக் கொள்வார்கள் வீட்டில் உள்ள சகோதரிகளுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று கூறினார்கள்.
பெண்கள் என்றால் அரசு பள்ளியில் சேர்த்தல் வீட்டில் உள்ள அனைவருக்கும் கீழ்ப்படிந்து நடத்தல்,வீட்டு வேலைகளை செய்தல், அம்மாவிற்கு உதவுதல் அண்ணன்கள் சொல்லும் வேலைகளை செய்தல், இது போன்ற வேலைப்பாடுகளை கூறினார்கள். மேல்நிலைக் கல்விக்கு பெண்கள் என்றால் அருகில் உள்ள கல்வி நிலையத்தை தேர்வு செய்து படிக்க வைப்பார்கள் ஆண்கள் என்றால் தொலைதூர கல்வி நிலையங்களில் படிக்க வைப்பார்கள்

அடிப்படையில் ஆண்கள் பெண்கள் என்ற வேலைபாகுபாடு இல்லை. நம் வீட்டில் உள்ள வேலையாக இருந்தாலும் கல்வியாக இருந்தாலும் பாகுபாடு இன்றி ஆண்களுக்கு வழங்கப்படும் அதே கல்வியே பெண்களுக்கும் வழங்க வேண்டும் அதே சமயம் வீட்டில் உள்ள வேலைகளை பெண்கள் தான் செய்ய வேண்டும் ஆண்கள் செய்யக்கூடாது என்று நினைத்து பிரித்துப் பார்க்கக் கூடாது வீட்டில் உள்ள வேலைகளில் ஆண்களுக்கும் பங்கு உண்டு எனவே கல்வி வேலை பகிர்வு ஆண் பெண்களுக்கு சமமானவையே ஆகும் என்று உறுப்பினர்களிடையே கருத்துக்கள் வழங்கப்பட்டது.

Leave a comment