பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்..

நாள் 28/02/2024.இடம் . ஜக்காம்பேட்டை. கிராமம். திண்டிவனம்..தாலுக்கா

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர் .
அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். திரு.முருகன். ஆசிரியர்
கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள் : 20.
ஜக்காம்பேட்டை, கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள், அரசு மூலமாக நடக்கும் திட்டங்கள் பற்றியும் உதவிகள் பற்றியும். குழந்தைகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.
ஓருங்கிணைந்த சேவை மையம்(.OSC) செயல்பாடுகள் பற்றியும். அவர்களின் இலவச எண் (181) பற்றியும் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கி வருகின்றது என குழந்தைகளிடம் விளக்கமாக கூறப்பட்டது.
வட்டாட்சியர் அலுவலகம் எங்கு உள்ளது என்பதை குழந்தைகளிடம் கேட்கப்பட்டு திண்டிவனத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதையும் அலுவலகம் மூலமாக எந்தெந்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது என்பதை தெள்ளந்தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
குழந்தைகளின் உரிமைகள் பற்றி குழந்தைகள் chart paper ல் எழுதி விளக்கம் அளித்தனர். குழந்தைகளுக்கு ஞாபக திறன் மேம்படுத்துவதற்கு குழு விளையாட்டு மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது . இதில் அனைத்து குழந்தைகளும் ஆர்வமாக விளையாடினார்கள்.இந்த விளையாட்டில் ஒரு குழந்தை மட்டும் வெற்றி பெற்றார். இவருக்கு மார்ச் மாதம் நடக்கும் குழு கூட்டத்தில் பரிசு கொடுக்க்வேண்டுமென கூறப்பட்டது. குழந்தைகளுக்கும் இந்த இல்லம் தேடி கல்வி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமெனவும் இறுதி தேர்வு மார்ச் மாதம் நடைபெறுவதால்.குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டுமெனவும் அனைவரும் இந்த மாலை நடக்கும் வகுப்பிற்கு கட்டாயமாக வர வேண்டு்ம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அனைத்து குழந்தைகளும் ஒற்றுமையாகவும், ஒழுக்க மாகவும் ,பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது..குழந்தைகளின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு மன நல ஆலோசனை மற்றும் சட்ட ஆலோசனை நம் அலுவலக மூலமாக வழங்கப்படும்.இதனால் அந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டுழுவலாம் என்று கூறப்பட்டது. குழந்தைகளின் உறவினர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாக இருந்தால் அவர்களை உடனடியாக குணப்படுத்த போதை மறுவாழ்வு மையத்தின் முகவரியை கொடுக்கப்பட்டது. அனைவரும் மாதம் ஒரு முறை நடக்கும் பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டனர்.

#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender @Eu_in_India #ADECOMN

Leave a comment