தேதி :19/3/2024 இடம் :ஓமந்தூரார் நிதி உதவி நடுநிலைப்பள்ளி கொத்தம்பாக்கம்
பங்கேற்ற மாணவிகளின் எண்ணிக்கை :11
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபா
கூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :
முதலில் அனைத்து மாணவிகளின் வட்டமாக அமர வைத்து கைகளை தட்டி மகிழ்விக்கிறோம். பிறகு கூட்டத்தில் லிவிஷ்டியா என்ற மாணவியை பாடல் ஒன்றை பாடும் படி கூறினோம். அது அவரும் நாட்டுப்புறப் பாடல் அழகாக பாடினார் அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்
பிறகு அவர்களிடம் முந்தைய கூட்டத்தில் என்ன நடந்தது என்று கேட்டு அறிந்தோம்
பெண்களுக்கான ஆதரவு அமைப்புகளை வரைந்து வர சொன்னீர்கள் நாங்கள் வரைந்து வந்துள்ளோம் என்று வரைந்து வந்துள்ள சாரத்தை எங்களிடம் கொடுத்தனர்
பின்னர் அவர்களிடம் பெட்டியில் இரண்டு இரண்டு கால்களில் ஒரே மாதிரியான பறவைகள் விலங்குகள் சத்தம் எழுதப்பட்டுள்ளது அதை எடுத்து ஒரே மாதிரியான சத்தம் உள்ளவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று கூறினோம்
பின்னர் ஒன்று சேர்த்த ஜோடிகளை ஒருவரைப் பற்றி ஒருவர் பெயர் பிடித்த விபரம் புத்தகம் வாழ்க்கையில் நீங்கள் என்னவாக போகிறீர்கள் பிடித்த புத்தகம் பாடல் இவை அனைத்தையும் கேட்டு அறியும்படி கூறிடும் அவர்களும் கேட்டு அறிந்து வந்து வட்டமாக அமர்ந்து எழுந்து ஒருவரைப் பற்றி ஒருவர் தங்கள் புரிந்து கொண்டதை எங்களிடம் விவரமாக கூறினார்கள்
இறுதியில் ஆணும் பெண்ணும் சமம் தான் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் வளர்க்கும் முறையில்தான் இருக்கிறது என்ற புரிதலை ஏற்படுத்தினோம்




Leave a comment