தலைப்பு: ஒரே மாதிரியான பாலின பாத்திர வரையறைகள்
நாள்: 19/03./2024. பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று தென்பசார்.
திண்டிவனம் .தாலுக்கா. நடைபெற்றது இக்கூட்டத்தில் 19 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தினை திருமதி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்.அபிராமி. கலந்துகொண்டார்.. இக்கூட்டத்தில் அதேகொம் பெண்கள் ககண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி. மற்றும் உறுப்பினர். திருமதி ரேவதி.அவர்கள் கலந்து கொண்டு பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களை, பறவைகள் , விளக்குகளின் பெயர் எழுதி அவற்றுள் நபருக்கு ஒரு சீட்டு எடுத்து சீட்டில் உள்ள விலங்கு, பறவைகளை போன்ற குறல் எழுப்பி அதன்மூலம் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டது. அவற்றுள் ஒரு குழு ஆண் குழந்தைகள் மற்றும் ஆண்களிடம் விரும்பப்படும் குண நலன்கள் பற்றியும் மற்றொரு குழுவினரிடம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களிடம் விரும்பப்படும் குண நலன்கள் பற்றியும் ஆலோசித்து கூற வேண்டும் என்று குழு விவாதத்திற்கு விடப்பட்டது.
பிறகு ஆண் குழந்தை குழுவினர், ஆண்கள் என்றால் பலசாலி, தைரியமானவர்கள், ஆண்கள் தவறு செய்தால் பெரிதாக கருத மாட்டார்கள், கடினமான வேலைகள் ஆண்கள் தான் செய்வார்கள், ஆண் குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பார்கள் இது போன்ற கருத்துக்களை ஆண் குழந்தைகளின் குழுவினர் பதிவு செய்தார்.
பெண் குழந்தைகள் என்றால் வீட்டை கவனித்துக் கொள்ள, வேண்டும் வீட்டில் உள்ள வேலைகளை பெண்கள் தான் செய்ய வேண்டும், சமையல் செய்வது பெண்களின் வேலை, வேலைக்குக்கு செல்வது கூடாது என்பார்கள் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது, பெண்கள் அமைதியானவர்கள், பிறரை சார்ந்து வாழ வேண்டும். இது போன்ற கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
குழந்தைகளிடம் தங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ஒற்றை பெற்றோர் இழந்த குழந்தைகள் இருந்தால் விழுப்புரம மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டுமென கூறப்பட்டது.
ஆண், பெண் என வேறுபட்ட கருத்துக் கள் குணநலன்கள் எதுவும் இல்லை எனவும் எடுத்துரைக்கப்பட்டது., சமூகம் குழந்தை பிறந்ததிலிருந்து ஆண் பெண் என்ற பாலின பாகுபாடு நாம் வளர்க்கப்படுகிறோம். இது நமக்குள் நம்மை அறியாமலேயே ஆண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சமூக பார்வையில் நாம் வளர்கிறோம்.
ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள், ஆண்கள் சாதிக்கக் கூடிய அனைத்து செயல்பாடுகளிலும் இன்று பெண்களின் பங்களிப்பும் உள்ளது பெண்கள் எல்லா துறைகளிலும் வளர்ந்து வருகிறார்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து பணிகளிலும் பெண்கள் உள்ளார்கள் எனவே இவற்றை ஆண்கள் தான் செய்வார்கள் நம்மால் முடியாது என்று எந்த இடத்திலும் ஒதுங்கி இருத்தல் கூடாது ஆண் பெண் இருவரும் சமம். எனவே பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என உறுப்பினர்களிடையே கருத்துக்கள்கேட்கப்பட்டு அடுத்த மாத கூட்டம் தேர்வுகள் இல்லாத நாட்களில் வைக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. குழுவிளையாட்டின் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் ஞாபகத்திற்ன் வளர்ப்பது சம்பந்தமாகவும் பேசப்பட்டது.




Leave a comment