தலைப்பு: அறிமுகம், அடிப்படை விதிமுறைகள்
நாள்: 20/.03./2024 , SHG உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் 29 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் இலட்சுமிபதி செய்திருந்தார். மேலும்
சிறப்பு அழைப்பாளர்களாக வீட் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் திருமதி ஜெயபாரதி மற்றும் தெண்ணகம் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் திரு .பாலமுருகன் அவர்களும் கலந்து கொண்டார்கள். இதில் சிங்கனூர் மற்றும் சிங்கனூர்புதுகாலனியைச்சேர்ந்த குழுதலைவிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
அனைவரயும் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர்வரவேற்க்கப்பட்டு அனைவரும் அறிமுகம் செய்துகொண்டார்கள். மேலும் உறுப்பினர்களிடையே தங்களுக்கு பிடித்த இரண்டு குணநலன்கள் பற்றி கேட்டறியப்பட்டது. இப்பயிற்சியில் உறுப்பினர் அவர்களின் எதிர்பார்ப்புகளை பற்றியும் கேடகப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் அவர்கள் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய செயல்பாடுகள் பற்றியும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் உறுப்பினர்களின் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு தேவையான பயிற்சிகள் பற்றி விளக்கமளித்தார். வீட் டரஸ்ட் நிர்வாக இயக்குனர் திருமதி ஜெயபாரதி அவர்கள் பெண்கள் ஆகிய நாம் பெண் குழந்தைகள் பிறந்தால் வருத்தப்படுகிறோம் ஆண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சி அடைகிறோம் ஏனென்று வினா எழுப்பினார்கள். பெண் குழந்தையாக இருந்தாலும் ஆண் குழந்தையாக இருந்தாலும் குழந்தையை பெற்றெடுப்பது ஒரு பெண் தான், ஆண் குழந்தை ,பெண் குழந்தை என்று வேறுபாடு பார்க்காமல் சமமாகவே கருதவேண்டும். இருப்பினும் குழந்தையை பெற்றெடுப்பது ஒரு பெண் தானே ஆனால் நாம் ஆண் குழந்தை தான் வேண்டும் என்கிறோம் பெண் குழந்தைகளை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், வலிமையானவராகவும் வளர்ப்பது நம்முடைய கடமை பெண்களாகிய நாம் நம்மை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் நாம் இச்சமுதாயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் ஆண், பெண் என்று வேறுபாடு இன்றி நாம் இரு பாலினத்தவரையும் சமமாகவே கருத வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குடி மற்றும் போதை பழக்கத்தில் உங்கள் உறவினர்களுக்கு போதை மறுவாழ்வு மையம் மூலமாக நடக்கும் சிகிச்சைைள் பற்றி விளக்கமாக கூறியுள்ளார்தெண்ணகம்டிரஸ்ட் நிர்வாகஇயக்குனர் யாலமுரூகன்விளக்கமளித்தார்..இறுதியாக 5.உறுப்பினர்கள் கூட்டத்தின் பிண்ணேக்க படிவத்தில் பூர்த்தி செய்தனர்.அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் கூறப்பட்டது.
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EU #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender #GenderEquality @Eu_in_India #ADECOMN





Leave a comment