பாலிகா பஞ்சாயத்து கூட்டம் – கொள்ளார். கிராமம். திண்டிவனம்.தாலுக்கா..
தலைப்பு:… வளரிளம் பருவத்தினரின்(ஆண் பெண்)வாழ்க்கைச் சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல் .
நாள்: 12/04/2024 , பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று கொள்ளார்.. கிராமம்.
திண்டிவனம் .தாலுக்கா. நடைபெற்றது இக்கூட்டத்தில் 19 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தினை திருமதி.பிரியங்கா. தன்னார்வலர்… அவர்கள் கலந்துகொண்டார்.. இக்கூட்டத்தில் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி. மற்றும் உறுப்பினர். திருமதி ரேவதி உளவியல்ஆலோசகர். திரு. எட்டியப்பன்.அவர்கள் கலந்து கொண்டு பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களை,ஆண் குழந்தை வளரிளம் பருவ ஆண் என ஒரு குழுவும் பெண் குழந்தை வளரிளம் பருவப் பெண் என்றும் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டது. நம் வாழ்வில் சூழ்நிலைகள் பற்றி முதலில் விவாதங்கள் செய்யப்பட்டு. இரண்டு குழுக்களுக்கும் மதிப்பெண் கொடுக்கப் பட்டது.
இரண்டாவதாக இரண்டு குழுக்களிடம் குழந்தை பிறப்பை கொண்டாடுவதை பற்றியும்
குழந்தைக்கு பெயர் சூட்டுதல் கொண்டாடுதல் பற்றியும்
குழந்தைக்கான சுகாதார சேவைகள் பற்றியும். குழுக்களின் தனித்தனியாக கேள்லிகள் கேட்கப்பட்டு விவாதங்கள் செய்யப்பட்டு இறுதியில் ஆண் குழந்தைகளும் மற்றும் பெண்குழந்தைைளும் சமம் என எடுத்துக் காட்டுகளுடன் கூறப்பட்டது.
குழந்தைகளுக்கு கல்விகொடுப்பது
னீட்டில் உள்ள வேலைகளை பகிர்ந்து செய்வது எல்லாம் சமமாகவே இருத்தல் மிக முக்கிய மானதாக கருதப்படுகிறது.
குழந்தைகளிடம் தங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ஒற்றை பெற்றோர் இழந்த குழந்தைகள் இருந்தால் விழுப்புரம மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டுமென கூறப்பட்டது.
ஆண், பெண் என வேறுபட்ட கருத்துக் கள் குணநலன்கள் எதுவும் இல்லை எனவும் எடுத்துரைக்கப்பட்டது., சமூகம் குழந்தை பிறந்ததிலிருந்து ஆண் பெண் என்ற பாலின பாகுபாடு நாம் வளர்க்கப்படுகிறோம். இது நமக்குள் நம்மை அறியாமலேயே ஆண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சமூக பார்வையில் நாம் வளர்கிறோம்.
ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள், ஆண்கள் சாதிக்கக் கூடிய அனைத்து செயல்பாடுகளிலும் இன்று பெண்களின் பங்களிப்பும் உள்ளது பெண்கள் எல்லா துறைகளிலும் வளர்ந்து வருகிறார்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து பணிகளிலும் பெண்கள் உள்ளார்கள் எனவே இவற்றை ஆண்கள் தான் செய்வார்கள் நம்மால் முடியாது என்று எந்த இடத்திலும் ஒதுங்கி இருத்தல் கூடாது ஆண் பெண் இருவரும் சமம். எனவே பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என உறுப்பினர்களிடையே கருத்துக்கள்கேட்கப்பட்டு தேர்வுகள் நடைப்பெற்றுவருவதால்அனைவரும் நன்றாக படிக்க வேண்டுமென கேப்டுக் கொள்ளப்பட்டது. கோடை விடுமுறை நாட்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. குழுவிளையாட்டின் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் ஞாபகத்திற்ன் வளர்ப்பது சம்பந்தமாகவும் பேசப்பட்டது.



Leave a comment