பாலிகா பஞ்சாயத்து கூட்டம்

தலைப்பு: வளர் நிலம் பருவத்தினரின் வாழ்க்கை தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்.

18.4.24 அன்று வில்லம்மாதேவி கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடு திரு வெங்கடேசன் தன்னார்வலர்.முதலில் கடந்த மாத நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி தங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. உறுப்பினர்களை இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவினரை ஆண் குழந்தைகளை வளர்க்கும் விதம் மற்றொரு குழுவினரை பெண் குழந்தைகளை வளர்க்கும் விதம் அவர்கள் மீது சமூகம் பார்க்கும் விதம் பற்றி குழு விவாதம் நடத்தி அக்கருத்தினை பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது பிறகு இரு குழுவினரும் ஆண் குழந்தைகளை வளர்ப்பு பற்றியும் பெண் குழந்தைகள் வளர்ப்பு பற்றியும் கருது தெரிவித்தார்கள் இதில் ஆண் குழந்தை பிறப்பின் அடிப்படையில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுவதையே ஒரு விழாவாக எடுக்கிறார்கள். ஆண் குழந்தை என்றால் ஊட்டச்சத்தான பொருட்களை வாங்கி கொடுத்து குழந்தை பருவத்தில் இருந்தே ஊட்டச்சத்துடன் வளர்க்கிறார்கள். ஆண் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கிறது அவர்களின் மேற்படிப்பிற்கும் அவர்கள் விரும்பும் கல்வி நிலையங்களில் சேர்க்கிறார்கள். ஆண் குழந்தைகள் எங்கு வேண்டுமானாலும் தனித்து சுதந்திரமாக சென்று வருகிறார்கள்.

பெண் குழந்தை பிறந்த உடனேயே பெண் பிறந்து விட்டால் என்பதற்காகவே இவற்றை பெரிதாக கருதுவதில்லை. பெண் குழந்தை பிறப்பை ஆண் குழந்தை பிறப்பை போன்று கொண்டாடப்படுவதில்லை. பெண் குழந்தை என்பதற்கு என்பதற்காகவே அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்படுவதில்லை. பெண்கள் மேற்படிப்பிற்கு அவர்கள் விரும்பும் கல்வி நிலையங்களுக்கோ அல்லது அவர்கள் விரும்பும் கல்வியை கொடுப்பதில்லை. பெண் குழந்தைகளை வெளியே சென்று விளையாடுவதற்கு அனுமதிப்பதில்லை. பெண் குழந்தைகளுக்கு தாங்கள் விரும்பும் ஆடையை உடுத்துவதற்கு வீட்டில் அனுமதி வழங்குவதில்லை. பெண் படித்து என்ன செய்யப் போகிறாய் நீ வேறொரு வீட்டிற்கு தானே செல்ல போகிறாய் என்பதற்காகவே அவர்களுக்கு கல்வியில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
கோடை விடுமுறைகளில் மாணவர்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் எங்கு வெளியே சென்றாலும் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது இந்த கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் gingee Adecom பெண்கள் கண்ணியம் அமைய ஒருங்கிணைப்பாளர் திரு ஜான்போஸ்கோ மற்றும் திருமதி குளோரி செய்து இருந்தனர் .

#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender @Eu_in_India #ADECOMN

Leave a comment