பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர் கூட்டம் (வளர் இளம் பருவத்தினரின் ஆண் பெண் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்)

ஊர் :மிட்டா மண்டகப்பட்டு தேதி :29/4/2024 இடம் :தன்னார்வலர் இல்லம்
பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை :10
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபா
கூட்டத்தில் பேசப்பட்ட கருத்து
மாணவிகளை ஒன்று சேர்த்து வட்டமாக அமர வைத்து அவர்களில் ஒருவரை ராகவி என்ற மாணவியை ஒரு பாடல் பாடும் படி கூறினும் அவர்களும் மிகவும் அழகாக பாடினார்கள்.
பின்னர் முந்தைய கூட்டத்தில் பேசப்பட்டதை நினைவூட்டினோம். தற்போது வெயில் கடுமையாக உள்ளதால் நீங்கள் அனைவரும் பத்திரமாகவும் ஜாக்கிரதியாகவும் வீட்டிலே இருக்கும்படி கூறினோம். வெயிலின் தாக்கத்தினால் நிறைய நோய்கள் வருவதால் நிறைய நீர் சத்துள்ள காய்கறிகள் பழங்கள் சாப்பிடும்படி கூறினோம் பின்னர் அவர்களை நல்ல காட்டன் உடை அணியும் படி கூறினோம். நிறைய தண்ணீர் குடிக்கும் படி கூறினோம். தற்போது பேசப்போகும் தலைப்பை பற்றி கூறினும்
குழுக்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒரு குழுவிற்கு வளர் இளம் ஆண்கள் மற்றொரு குழுவிற்கு வளர் இளம் பெண்கள் என்று பெயர் சூட்டப்பட்டது. அதில் திரு ஜெய பிரபா அவர்கள் 15 வாக்கியங்களை வாசித்தார். ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும்
தங்களுக்கு பிடித்த இடத்தில் வளரிடம் பருவம் ஆண்கள் இடத்தில் அல்லது வளர பருவ பெண்கள் இடத்தில் சென்று நின்று விடலாம் என்று கூறினோம். இறுதியில் பாலின சமத்துவத்தின் புரிதலை ஏற்படுத்தினோம். பின்னர் மாணவிகளின் கருத்தை கேட்டறிந்தோம் அதற்கு மாணவிகள் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் எங்களை வளர்த்தால் நாங்கள் மிகவும் சிறந்த மாணவிகளாக வருவோம் என்று கூறினார்கள். பின்னர் அவர்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களை எங்களிடம் கூறினார்கள் தன் சகோதரரை வளர்க்கும் விதம் தன்னை வளர்க்கும் விதத்தைப் பற்றி கருத்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் இறுதியில் இதற்கெல்லாம் நீங்கள் படித்து நல்ல நிலைமைக்கு வந்தால்தான் இதை எல்லாம் மாற்ற முடியும் என்ற புரிதலை ஏற்படுத்தினோம்
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender @Eu_in_India #ADECOMN

Leave a comment