இடம் கலையூர் கிராமம். , 30.4.24
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் எண்ணிக்கை. 8
30.4.24, கலையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர, கூட்டம் நடைபெற்றது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவிகள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. பெண் குழந்தைகள் கட்டாயம் வெளியில் செல்லும்போது பெற்றோரிடம் கூறிவிட்டு செல்ல வேண்டும் என்றும் தேவையில்லாத நண்பர்களுடன் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துவக்கத்தில் ஆண் குழந்தை வளரிளம் பருவ ஆண் என ஒரு குழுவும் பெண் குழந்தை வளரிளம் பருவப் பெண் என்றும்
இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டது. நம் வாழ்வில் சூழ்நிலைகள் பற்றி முதலில் விவாதங்கள் செய்யப்பட்டு. இரண்டு குழுக்களுக்கும் மதிப்பெண் கொடுக்கப் பட்டது.
இரண்டாவதாக இரண்டு குழுக்களிடம் குழந்தை பிறப்பை கொண்டாடுவதை பற்றியும்
குழந்தைக்கு பெயர் சூட்டுதல் கொண்டாடுதல் பற்றியும்
குழந்தைக்கான சுகாதார சேவைகள் பற்றியும். குழுக்களின் தனித்தனியாக கேள்விகள் கேட்கப்பட்டு விவாதங்கள் செய்யப்பட்டு இறுதியில் ஆண் குழந்தைகளும் மற்றும் பெண்க குழந்தைகளும் சமம் என எடுத்துக் காட்டுகளுடன் கூறப்பட்டது.
குழந்தைகளுக்கு கல்விகொடுப்பது. வீட்டில் உள்ள வேலைகளை பகிர்ந்து செய்வது எல்லாம் சமமாகவே இருத்தல் மிக முக்கிய மானதாக கருதப்படுகிறது.
குழந்தைகளிடம் ஆண், பெண் என வேறுபட்ட கருத்துக் கள் குணநலன்கள் எதுவும் இல்லை எனவும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த சமூகம் குழந்தை பிறந்ததிலிருந்து ஆண் பெண் என்ற பாலின பாகுபாட்டில் நாம் வளர்க்கப்படுகிறோம். இது நமக்குள் நம்மை அறியாமலேயே ஆண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சமூக பார்வையில் நாம் வளர்கிறோம்.
ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள், ஆண்கள் சாதிக்கக் கூடிய அனைத்து செயல்பாடுகளிலும் இன்று பெண்களின் பங்களிப்பும் உள்ளது பெண்கள் எல்லா துறைகளிலும் வளர்ந்து வருகிறார்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து பணிகளிலும் பெண்கள் உள்ளார்கள் எனவே இவற்றை ஆண்கள் தான் செய்வார்கள் நம்மால் முடியாது என்று எந்த இடத்திலும் ஒதுங்கி இருத்தல் கூடாது. ஆண் பெண் இருவரும் சமம். எனவே பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என உறுப்பினர்களிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டது . இந்த கூட்டத்தின் முக்கிய தகவலாக வருகிற மே மாதத்தில் மாவட்ட சமூக நலத் துறையின் சிறப்பு திட்ட பெண் குழந்தைகளுக்கு கணினி பயிற்சி அளிப்பதற்கான பெயர் பட்டியல் கேட்டுள்ளனர் அதன்படி விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செஞ்சி அதே கொம் பெண்கள் கண்ணிய மையம் ஒருங்கிணைப்பாளர் திரு ஜான்போஸ்கோ மற்றும் திருமதிகுளோரி செய்திருந்தனர்.
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EU #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender #GenderEquality @Eu_in_India #ADECOMN




Leave a comment