பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்


இடம் ஜம்போதி இருளர் குடியிருப்பு . நாள் 6/5/ 2024.

பயிற்சியில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் 10.

பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் . திருமதி உமா தன்னார்வலர் ஜம்போதி கிராமம்.

இன்றைய கூட்டத்திற்கான தலைப்பு. Sustainable development goals..SDG.

கூட்டத்தின் துவக்கத்தில் அனைத்து உறுப்பினர்களும் கடந்த மாதத்தில் நடந்த தங்களுடைய அனுபவங்கள் குறித்து ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் உறுப்பினர்களுக்கு இந்த கோடை காலத்தை எவ்வாறு நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சில அறிவுரைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது அதில் முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் இந்த வெயில் நேரங்களில் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது

மேலும் குழந்தைகள் தங்களுடைய வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் உங்களுடைய பெற்றோரிடத்தில் கட்டாயம்
நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை கூறிவிட்டு செல்ல வேண்டும் குறித்த நேரத்தில் மீண்டும் வீடு சேர வேண்டும் என்றும் புதிய ஆண் நபர்களுடனான தொடர்புகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

SDG.
இதில் நான்கு முக்கிய இலக்குகளை எடுத்துக் கொண்டோம்

  1. தரமான கல்வி.
  2. பாலின சமத்துவம்
  3. தண்ணீர் மற்றும் சுகாதாரம்
  4. சுற்றுச்சூழல் மேம்பாடு.
    போன்று நான்கு முக்கிய இலக்குகளை மாணவர்கள் இடத்தில் உதாரணங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது இந்த நான்கு இலக்குகள் குறித்து விரிவான ஒரு திட்டமிடல் வருகின்ற ஜூன் மாதத்தில் நாம் இவற்றை செயல்படுத்த இருக்கிறோம்.
    என்பது குறித்து மாணவர்களிடத்திலே எடுத்துக் கூறப்பட்டது.

மாவட்ட சமூக நலத்துறையின் சார்பாக கோடைகால சிறப்பு பயிற்சியாக பெண் பிள்ளைகளுக்கு கணினி பயிற்சி அளிப்பதற்கான தகவல் பெறப்பட்டதின் அடிப்படையில் =நம்முடைய பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் வளர் இளம் பெண் பிள்ளைகள் கலந்து கொள்வதற்கான பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திரு ஜான்போஸ்கோ அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் செஞ்சி செய்திருந்தார்.

#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender @Eu_in_India #ADECOMN

Leave a comment