திண்டிவனம்- மே 28 இன்று திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பில் திண்டிவனம் அப்போலோ சமுதாயக் கல்லூரியில் சமூக உறுப்பினர்களுக்கு இழப்பீடு மற்றும் ஆதரவு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் நிர்வாக அறங்காவலர் மற்றும் சட்ட ஆலோசகர் திரு. சீனுபெருமாள் அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் திரு. நெப்போலியன் அவர்களும், தென்னகம் டிரஸ் நிர்வாக இயக்குனர் திரு. பாலமுருகன் அவர்களும்,சித்த மருத்துவர் திருமதி பால ரக்ஷிதா அவர்களும். அப்போலோ சமுதாயக் கல்லூரி தாளாளர் திரு. முரளிகண்ணன் பெருமாள் ராஜா அவர்களும், கலந்து கொண்டனர். அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் ஒருங்கிணைப்பாளர் திரு. லட்சுமிபதி அனைவரையும் வரவேற்றார் இதில் குழந்தைகளின் கல்வி மேம்பாடுகள் பற்றியும் சட்டம் சார்ந்த செயல்பாடுகள் பற்றியும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் அதேகொம் பெண்ணகம் தண்ணிய மையம் நிர்வாக அறங்காவலர் திரு, சீனுபெருமாள் எடுத்துக் கூறினார். மனநிலைகளில் மாற்றம், சத்தான உணவுகள், பற்றியும் உடல் நிலைகள் பற்றியும் சித்த மருத்துவமர் எடுத்துக் கூறினார். அரசு மூலமாக கிடைக்கும் இழப்பீட்டுத் தொகைக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிப்பது எப்படி என்று எடுத்துக் கூறினார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் கிடைக்கும் உதவிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் சார்ந்த அலுவலர் திரு. நெப்போலியன் எடுத்துக் கூறினார். வழக்கின் தன்மைகள் பற்றியும் வழக்கின் தற்போதைய நிலையில் குறித்தும் வழக்கறிஞர் திரு. பிரகாஷ் அவர்கள் எடுத்துக் கூறினார். பெண் குழந்தைகளை படிக்க வைப்பதற்கும் பெண் குழந்தைகளை தங்கள் அப்போலோ சமுதாயக் கல்லூரியில் வறுமையில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சியில் சேர்த்து படிக்க உதவி செய்வதாக அப்போலோ சமுதாயக் கல்லூரி தாளாளர் திரு முரளி கண்ணன் எடுத்துக் கூறினார். பெண் குழந்தைகளை படிக்க வைக்க அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து பாடுபட வேண்டும் எனவும், அதேகொம் நிறுவனர் நம் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் கருதி உதவி செய்வதற்கு எங்கள் நிறுவனம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EU #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender #GenderEquality @Eu_in_India #ADECOMN





Leave a comment