இடம் .அரசினர் நடுநிலைப்பள்ளி ஜெயங்கொண்டம்.
நாள் :12.06.2024
பங்கேற்ற மாணவர்கள் :142
பங்கேற்ற ஆசிரியர்கள் :7
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஜெயங்கொண்டான், அரசினர் நடுநிலைப் பள்ளியில் அதேகொம் பெண்கள் கண்ணிய மையத்தின் சார்பில் சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திருமதி லீமா அவர்கள் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் துவக்கமாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காவல் உதவி ஆய்வாளர் மாணவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்தும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் குழந்தைகள் இந்த கால சூழ்நிலையில் எவ்வாறெல்லாம் பாதிப்படைகிறார்கள் என்பது குறித்தும் குழந்தைகள் தங்களுக்கான பிரச்சனைகளை கட்டாயமாக பெற்றோரிடம் மற்றும் ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பள்ளிக்கு வந்து கல்வி கற்க வேண்டும் என்றும் தற்போதுள்ள சூழ்நிலையில் அதிகமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படுகிறார்கள் எனவே பெண் குழந்தைகள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
மேலும் பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து விவரங்கள் கேட்டறியப்பட்டு அந்த மாணவர்களை கட்டாயம் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைமை ஆசிரியரிடம் அதேகொம் கண்ணிய மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு தலைமை ஆசிரியர் கட்டாயம் வருகிற காலங்களில் நாங்கள் அந்த மாணவர்களை பள்ளியில் மீண்டும் சேர்க்குகிறோம் என்று பொறுப்பேற்றுக் கொண்டார் .
இந்த நிகழ்ச்சியின் இறுதியாக திருமதி சுசீலா உதவி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை WDC ஒருங்கிணைப்பாளர்
திரு ஜான்போஸ்கோ அவர்கள் செய்திருந்தார்.
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EU #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender #GenderEquality @Eu_in_India #ADECOMN


Leave a comment