தேதி: 10/11/2023. இடம்: எண்டியூர்.
தொகுப்பாளர்: வினிதா. தன்னார்வலர்.
பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 20.
நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. உறுப்பினர். திரு எட்டியப்பன் உளவியல் ஆலோசகர். அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.
இந்த கூட்டத்தில், உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு நூலகத்தில் எப்படி உறுப்பினராவது அந்த உறுப்பினர் படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.அடுத்த் மாத கூட்டத்தி எண்டியூர் சென்ட்ரல் வங்கியில் எப்படி பணம் செலுத்துவது எடுப்பது பற்றியும் நேரடியாக குழந்தைகளை அழைத்து செல்லலாம் என கூறப்பட்டது.குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.
குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.. கடந்த மாதம் நடைபெற்ற பாலிக்கா பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் அவர்களை அறிமுகம் செய்யப்பட்டது. இவர்களுக்கு அடுத்த மாதம் பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சான்றிதழ்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் கல்வி ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.விளைவுகள்: அனைவரும் மாதம் ஒரு முறை நடக்கும் பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொள்வதாக ஒப்பு கொண்டனர்.




Leave a comment