பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேதி: 09.12.2023. இடம்: கரிக்கலாம்பாக்கம் அங்கன்வாடி மையம். அதேகொம் பின்னகம் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு, அங்கன்வாடி மையம் ஒருங்கிணைந்த சமூக குழுக்கள் வழிநடத்தும் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமிகு. தவமணி சமூக வல்லுனர் கரிக்கலாம்பாக்கம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திருமிகு. பத்மாவதி கூட்டுக்குரல் நாடக இயக்கம் அவர்கள் நோக்க உரையாற்றினார் நோக்க உரை ஆற்றினார். திருமிகு. மாயாதேவி ஆஷா பணியாளர் அவர்கள் கருத்துரை வழங்கினார். திருமிகு தவமணி சமூக வல்லுனர் கரிக்கலாம்பாக்கம் அவர்கள் கூறிய கருத்து கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் அதேகொம் பின்னகத்தின் மூலம் அங்கன்வாடி இணைந்து விழிப்புணர் நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார்கள் அவர்களுக்கு சமூக குழுக்களின் சார்பாக நன்றி அதேகொம் பின்னகம் கூட்டுக் குரல் நாடக இயக்கம் அங்கன்வாடி மையத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு வழங்கி வருகிறார்கள் மேலும் 16 நாள் தொடர் பிரச்சாரத்தின் அடிப்படையில் இன்று நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று பயனடைய வேண்டும் மேலும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பயனாளிகளை கண்டறிந்தால் கூட்டுக் குரல் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்று கூறினார். திருமிகு. கஸ்தூரி கூட்டுக்குரல் நாடக இயக்கம் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 35 பெண்கள் 5 குழந்தைகள் ஐந்து ஆண்கள் கலந்து கொண்டனர்.


Leave a comment