வன்முறைக்கு எதிரான 16 நாள் தொடர் பிரச்சாரம்

16 நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஐயன்குட்டிபாளையம் கல்மேடுபட்டு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முதலாவதாக திருமிகு. சாந்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருமதி. அத்தன்சியா வழக்கறிஞர் அவர்கள் குடும்ப வன்முறை குறித்த சட்டங்கள் பற்றி விளக்கினார். திருமதி. ரோஸ்லின் ஷீலா சமூக பணியாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை குடும்ப வன்முறை என்றால் என்ன குடும்ப வன்முறை குறித்த வகைகள் மற்றும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி விளக்கினார். இறுதியாக அங்கன்வாடி பணியாளர் நன்றியுரை வழங்கினார்.

Leave a comment